அகந்தை, சகிப்புத்தன்மை ஆகிய குணங்களை காலணிகள் போல கருதி, வீட்டிற்கு வெளியிலேயே விட்டுவிட வேண்டும். இல்லையெனில் குழந்தைகள் பாதிக்கப்படுவர்.
சேலம் மாவட்டத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றிய சசிகுமார் என்பவர் மீது, மனைவி இந்துமதி வன்முறை தடை சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து, சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை சுட்டிக்காட்டி சசிகுமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்யுமாறு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், சசிகுமாரை பணியிடை நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து, 15 நாட்களில் மீண்டும் பணியில் சேர்க்க கால்நடை துறை இயக்குனருக்கு உத்தரவிட்டார்.
மேலும், திருமணம் என்பது ஒப்பந்தம் அல்ல என்பதை தற்போதைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும். அகந்தை, சகிப்புத்தன்மை ஆகிய குணங்களை காலணிகள் போல கருதி, வீட்டிற்கு வெளியிலேயே விட்டுவிட வேண்டும். இல்லையெனில் குழந்தைகள் பாதிக்கப்படுவர் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…