இந்த ஊரில் நாளைமுதல் சந்தைகள், வங்கிகள் இயங்காது .!

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் 1204 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு 12 உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியில் 3 பேருக்கு கொரோனா உறுதியானதால் மக்கள் நடமாட்டத்தை குறைக்க வாணியம்பாடியில் நாளை முதல் காய்கறி சந்தைகள் மற்றும் வங்கிகள் இயங்காது என்றும் மருந்தகங்கள் காலை 6 முதல் மதியம் 2 மணிவரை மட்டுமே செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்கள் போனில் தகவலளித்தால் மளிகை அல்லது காய்கறிகள் தொகுப்பு வீடுகளுக்கே விநியோகிக்கப்படும். 8270007135 என்ற எண்ணில் தகவல் தெரிவித்தால் அத்தியாவசிய பொருள்கள் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும்.
இதையெடுத்து 8270007258 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலமாக தகவல் தெரிவித்து அத்தியாவசிய பொருள்கள் பெறலாம்.மருத்துவ உதவிபெற 8270007180 என்ற எண்ணில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.