‘மார்க்கண்டேயன் ஸ்டாலின்’ – நடைப்பயிற்சியின் போது மக்களோடு உரையாடிய முதல்வர்…! வீடியோ உள்ளே…!

Published by
லீனா

இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை அடையாறு தியோஃபிகள் சொசைட்டி வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட  போது மக்களுடன் உரையாடினார். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தான் முதல்வர் என்பதையும் மறந்து வெளியே எங்கு சென்றாலும் மக்களை பார்த்தால் மிகவும் சாதாரணமான ஒரு மனிதனாக மக்களோடு மக்களாய் பேசுவது வழக்கம். அதே சமயம் முதல்வர் அவர்கள் தனது உடல் நலத்தை பாதுகாப்பதிலும் தனி கவனம் செலுத்தி வருகிறார்.அந்த வகையில் இவர் வாரத்தில் இரண்டு நாட்கள் சைக்கிளிங் செல்வது, நடைபயிற்சி மேற்கொள்வது, அவ்வப்போது ஜிம்முக்கு சென்று ஒர்க்அவுட் செய்வது போன்றவற்றை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை அடையாறு தியோஃபிகள் சொசைட்டி வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட  போது, அவருடன் அமைச்சர் சுப்பிரமணியனும் நடைப்பயிற்சி செய்ய வந்திருந்தார்.

அப்போது அங்கு நடைப்பயிற்சி மேற்கொண்ட பொதுமக்களுடன் முதல்வர் மிகவும் இயல்பாக உரையாடினார். அச்சமயம் முதல்வருடன் பேசிய ஒரு பெண்மணி சார் இரண்டு வருடங்களுக்கு முன்பு உங்களை நான் ஏர்போட்டில் சந்தித்தேன். நீங்கள் கண்டிப்பாக ஆட்சிக்கு வரவேண்டும் என்று கூறினேன். இப்பொழுது நீங்கள் ஆட்சிக்கு வந்து விட்டீர்கள்.

உங்களது ஆட்சி மிகவும் சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு விஷயத்தையும் நீங்கள் பார்த்து பார்த்து செய்கிறீர்கள். இதை நீங்கள் இப்படியே தொடர வேண்டும் என்று பேசினார். மேலும் கால்பந்து விளையாட ஸ்பெயின் சென்று தங்களது பெயரில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தினார்.

முதல்வரிடம் விடாமல் பேசிய அந்தப் பெண்மணி கடைசியாக ஒன்று சார் என்று கூறி, எப்படி சார் இப்படி மார்க்கண்டேயனாகவே இருக்கீங்க என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஸ்டாலின் உடற்பயிற்சி செய்கிறேன் என்று கூறினார். முதல்வர் ஸ்டாப்களின் அவர்கள் மக்களுடன் மிகவும் சகஜமாக உரையாடிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Recent Posts

பங்கு நானும் வரேன்.., ஏர்டெலை தொடர்ந்து ஜியோ-வின் ‘ஸ்டார்லிங்க்’ சம்பவம்!

பங்கு நானும் வரேன்.., ஏர்டெலை தொடர்ந்து ஜியோ-வின் ‘ஸ்டார்லிங்க்’ சம்பவம்!

டெல்லி : அதிவேக இன்டர்நெட், நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரையில் தடையில்லா இணைய சேவை உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்திய …

7 minutes ago

விராட், ரோஹித் எல்லாம் ஓரம் போங்க! இன்ஸ்டாவில் சம்பவம் செய்த ஹர்திக் பாண்டியா!

துபாய் : இன்ஸ்டாகிராம் தளத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் வரவேற்பை பெற்றி சொல்லியே தெரியவேண்டாம். அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் விராட்…

1 hour ago

உங்களை கல்யாணம் பண்ண எப்படி மாறனும்? பதில் சொல்லி ரசிகரை அழவைத்த மாளவிகா!

சென்னை : சமூக வலைத்தளங்களில் மாளவிகா மோகனன் ஒரு போஸ்ட் ஒன்றை போட்டாலே போதும் லைக்குகளும், கமெண்டுகளும் மலைச்சாரல் போல…

2 hours ago

3வது மொழியை கட்டாயமாக திணிப்பது ஏன்? தர்மேந்திர பிரதானுக்கு அன்பில் மகேஷ் கேள்வி!

சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…

4 hours ago

விரைவில் ரஷ்யா – உக்ரைன் போர் முடிவு? ஜெலன்ஸ்கியை அழைக்கும் டொனால்ட் டிரம்ப்!

ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…

5 hours ago

LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…

6 hours ago