கடல்பசு இனத்தை பாதுகாக்கும் பொருட்டு “கடற்பசு பாதுகாப்பகம்” மன்னார் வளைகுடா, பாக் விரிகுடா பகுதியில் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கபப்ட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 10-வது நாளாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இன்று மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தமிழ்நாட்டில் அழிந்து வரும் நிலையில் உள்ள மிக அரிதான கடல்பசு இனத்தை பாதுகாக்கும் பொருட்டு “கடற்பசு பாதுகாப்பகம்” மன்னார் வளைகுடா, பாக் விரிகுடா பகுதியில் ஏற்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும், மன்னார் வளைகுடா மற்றும் பாக் கடற்பகுதியில் காணப்படும் கடற்பசு என்பது மிக அரிய வகை கடல்வாழ் பாலூட்டியாகும். கடல்மாசு மற்றும் கடல் கடற்புல் அழிக்கப்படுவதால் இந்த இனம் அழிவை சந்தித்து வருகிறது. இதை பாதுகாக்கும் பொருட்டும் இந்தியாவில் முதல் முறையாக “கடற்பசு பாதுகாப்பகம் ” இப்பகுதியில் சமூகப்பங்களிப்புடன் ஏற்படுத்தப்படும் நாட்டின் வளமையான கடல் வாழ் உயிர்ப்பன்மை பாதுகாப்பிற்கு இக்காப்பகம் உதவி புரியும் என தெரிவித்துள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…