மெரினா மீன் அங்காடிகளை முறைபடுத்துவது, சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்குகள் வழக்குகள் விசாரணை கடந்த 11-ம் தேதி உயர் நீதிமன்றத்தில் வந்தது. அப்போது மெரினா திறப்பது குறித்து பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர்.
அப்போது , நவம்பர் இறுதி வரை மெரினாவை திறக்க வாய்ப்பில்லை என தமிழக அரசு தெரிவித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள் மெரினா திறப்பது குறித்து சென்னை மாநகராட்சியும், தமிழக அரசு விரைவில் முடிவு எடுக்கவேண்டும்.
மேலும், மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பதில் தாமதம் ஏன்..? திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மெரினா கடற்கரையை திறப்பதில் என்ன சிரமம்..? என கேள்வி எழுப்பியது. இதைத்தொடர்ந்து, வழக்கு விசாரணையை நவம்பர் 18-ம் தேதி அதாவது இன்று ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மெரினா கடற்கரை திறப்பது குறித்து டிசம்பர் முதல் வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மெரினா கடற்கரையை திறப்பது குறித்து டிசம்பர் முதல் வாரத்தில் முடிவு எடுக்கப்பட விட்டால் நீதிமன்றமே திறக்க நேரிடும் என கூறியது.
மெரினாவில் தள்ளுவண்டிகள் டெண்டர்கள் அமைப்பது குறித்த நடவடிக்கைகளில் தலைமை நீதிபதி தடை விதித்திருந்தார். அந்தத் தடையை விலக்கிக் கொண்ட நீதிமன்றம் அந்த டெண்டரில் 900 தள்ளுவண்டிகளை அமைப்பது தொடர்பான நடவடிக்கை தொடரலாம் எனவும் வழக்கை டிசம்பர் 03-ஆம் தேதி ஒத்திவைத்தது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…