டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகிவரும் மாரிதாஸ்! திமுக போலீசில் புகார் கொடுக்கும் அளவிற்க்கு என்ன கூறினார்?!
மாரிதாஸ், இவர் இணையதள பக்கமான யூ-டியூபில் ஒரு சேனல் நடத்திவருகிறார். இந்த யூ-டியூப் சேனலில் இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஒரு வீடியோ பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோவில் பாகிஸ்தானிற்கும், திமுகவுக்கும் தொடர்புள்ளது என்பது போல வீடியோவிற்கு தலைப்பாக வைத்து உள்ளே பாகிஸ்தானையும் திமுகவையும் சம்பந்தப்படுத்தி ஒரு வீடியோ பதிவிட்டு இருந்தார்.
இதற்கு திமுக தரப்பில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும், திமுக மீது அவதூறு பரப்பியதாகவும், தொடர்ந்து அவதூறு பரப்பும் நோக்கத்தில் வீடியோ வெளியிட்டு வருவதாகவும், கூறி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவருக்கு ஆதரவாக #ISupportMaridhas எனவும் #MentalMaridhas எனவும் இரண்டு விதமாக ஹேஸ்டேக்குகள் ட்விட்டரில் தமிழ்நாடு அளவில் போட்டி போட்டு டிரெண்ட் ஆகி வருகின்றன.