விளிம்பு நிலை மக்களின் குரலாய் ஒலிக்கும் சமரர்..! திருமாவளவனுக்கு சீமான் வாழ்த்து…!
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சீமான்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கமலஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சீமான் அவர்கள் பதிவிட்டுள்ள பதிவில், ‘விளிம்பு நிலை மக்களின் குரலாய் ஒலிக்கும் சமரர்! தமிழ்த்தேசிய இனத்தின் உரிமை மீட்புக்களங்களில் கருத்தியலாகவும், களப்பணிகள் வாயிலாகவும் அயராது பங்காற்றி வரும் அரசியல் பேராளுமை! அன்பிற்கினிய அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!’ என பதிவிட்டுள்ளார்.
விளிம்பு நிலை மக்களின் குரலாய் ஒலிக்கும் சமரர்!
தமிழ்த்தேசிய இனத்தின் உரிமை மீட்புக்களங்களில் கருத்தியலாகவும், களப்பணிகள் வாயிலாகவும் அயராது பங்காற்றி வரும் அரசியல் பேராளுமை!
அன்பிற்கினிய அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!@thirumaofficial pic.twitter.com/hqnR0Ul0pN
— சீமான் (@SeemanOfficial) August 17, 2021