தென்காசி மாவட்டத்துக்கு மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை!

Default Image

அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்துக்கு மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை. 

உள்ளூர் விடுமுறை:

அய்யா வைகுண்டர் அவதார தின விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்துக்கு மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு ஏற்கனவே நெல்லை மாவத்திற்கு மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்தி நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தவிட்டிருந்தார்.

Local holiday for Kanyakumari district
Local holiday notification for Kanyakumari district on 5th. [Image Source: Vikadan]

நெல்லை மாவட்டத்தில் மார்ச் 4-ம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 11-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும், பள்ளி, கல்லூரிகளில் பொதுத் தேர்வு நடைபெற்றால் விடுமுறை பொருந்தாது என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வைகுண்டரின் அவதார தினம்:

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20ம் தேதி வைகுண்டரின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் மார்ச் 4ம் தேதி வைகுண்டரின் 191-வது அவதார தினம் கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் தாமரைக்குளம் கிராமம் சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது.

vaikundar

இங்கு ஆண்டு தோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படும். அந்தவகையில் , தென்காசி மாவட்டத்துக்கு மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்