மார்ச் 20 பட்ஜெட் தாக்கல்.! தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் 2ம் தேதி ஆலோசனை!
2023-24-ம் ஆண்டிற்கான பட்ஜெட் 20ம் தேதி தாக்கலாக உள்ள நிலையில், நிதியமைச்சர் ஆலோசனை.
2023-24 நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மார்ச் 20ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது என சபாநாயகர் அறிவித்திருந்தார். தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும் என்றும் சட்டப்பேரவையில் யார் யாரை எங்கு உட்கார வைக்க வேண்டும் என்பது சபாநாயகரின் உரிமை எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு பட்ஜெட் குறித்து தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் 2-ஆம் தேதி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்த உள்ளார். 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் 20ம் தேதி தாக்கலாக உள்ள நிலையில், நிதியமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னையில் பெரு, சிறு, குறு தொழில் நிறுவன சங்க பிரதிநிதிதிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் புதிய தொழில் நிறுவனங்கள், நிதி சலுகைகள் வேலைவாய்ப்பு குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.