‘மாப்பிள்ளை சம்பா’ ‘தங்க சம்பா’ – அவையில் சிரிப்பலை..!
மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் மாப்பிள்ளை மாதிரி இருக்கலாம், தங்க சம்பா சாபிட்டால் தங்கம் மாதிரி இருக்கலாம் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இன்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள், தமிழக வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தோளில் பச்சை துண்டு அணிந்து வந்து வேளாண் பட்ஜெட்டை வாசித்து வருகிறார்.
தங்க சம்பா சாபிட்டால் தங்கம் மாதிரி இருக்கலாம்
இந்த நிலையில், மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் மாப்பிள்ளை மாதிரி இருக்கலாம், தங்க சம்பா சாபிட்டால் தங்கம் மாதிரி இருக்கலாம் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் என கூறினார். அதற்கு சபாநாயகர் அப்பாவு, அனைவருக்கும் கொடுங்க சாப்பிட தயாராகத்தான் இருக்கிறார்கள் என கூறினார். இதானால் அவையில் சிரிப்பலை எழுந்தது.