‘நலம் சூழ வாழிய பல்லாண்டு!’ – கமலஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் அவர்கள் இன்று தனது கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இவரது பிறந்தநாளை மக்கள் நீதி மய்யம் கட்சி வெகு சிறப்பாக கொண்டா உள்ளது. இதுகுறித்து கட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கமல் ஹாசன் அவர்களின் பிறந்தநாள் விழாவை சிறப்புடன் கொண்டாட நமது கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் விரும்பிய வண்ணம், தலைவரின் பிறந்தநாளான 07-11-2023 அன்று, மாலை 3 மணிக்கு சென்னை, நீலாங்கரையில் உள்ள R.K.Convention Centre அரங்கில் தொண்டர்களும், நற்பணி நம்மவர்களும் சூழ, வெகுசிறப்புடன் கொண்டாடப்பட இருக்கிறது.
ஆழ்ந்த அறிவும், எல்லையில்லா ஆற்றலும், பலகோடி மக்களை ஈர்க்கும் வல்லமையும், தேர்ந்த ஆளுமையும் கொண்ட நமது தலைவரின் பிறந்தநாளை கொண்டாடவும், நாடாளுமன்றத் தேர்தலை எழுச்சியோடு எதிர்கொள்ளவும் நவம்பர் 7 (செவ்வாய்க்கிழமை) அன்று நாம் அனைவரும் ஒன்றுகூடுவோம் என அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கமலஹாசன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த வாழ்த்து பதிவில், ‘கலையுலகில் சாதனைகள் பல படைக்கும் கலைஞானி – மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! நலம் சூழ வாழிய பல்லாண்டு!’ என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025