திருநெல்வேலி முன்னாள் மேயர் கொலை வழக்கில் பல திடுக்கிடும் தகவல் – விசாரணை தொடர்கிறது!

Default Image

திருநெல்வேலி மாநகர முன்னாள் திமுக மேயராக இருந்த உமா மகேஸ்வரி அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் அவர்கள் வீட்டு பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கொலை வழக்கில் புதிதாக பல திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளாகவும் அது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

 

கடந்த 23 ம் தேதி பிற்பகலில் திருநெல்வேலி மாநகரம் ரெட்டியார்பட்டி சாலையில் இருக்கும் மேயர் இல்லத்தில் மூவர் கொலை செய்யப்பட்டு இருந்தனர். இவர்கள் கொலை குறித்து காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர். இவர்கள் நகைக்காக கொலை செய்யப்பட்டார்களா அல்லது வேறு ஏதேனும் விவகாரம் என்று குற்றவாளிகளை தேடி வருகின்றனர். ஆனால், குற்றவாளிகளை கண்டு பிடிப்பதில் காவல்துறையினர் திணறி வருகின்றனர். காவல்துறை தொடர்ந்து நடத்தி வரும் விசாரணையில், மேயர் வீடு செல்லும் பகுதியில் இருக்கும் உணவுக்கடை ஒன்றில் வந்த சிலர் பாதியிலே எழுந்து செல்லும் காட்சி கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில்,காவல்துறைக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதில், அரசியல் ரீதியாக, திமுக பெண் பிரமுகர் சீனியம்மாள் என்பவர் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரியிடம் பழகியுள்ளார். கடந்த 2016 ம் தேதி சங்கரன்கோவில் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட தனக்கு தெரிந்த ஒருவருக்கு இடம் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதற்கு, தொகையாக 50 லட்சம் ரூபாய் உமா மகேஸ்வரியிடம் கொடுத்துள்ளார்.சீட் கேட்ட நிலையில் கிடைக்காமல் விரக்தியில் இருந்து வந்துள்ளார். அப்போது, நாடாளுமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் சீட் வாங்கி தருவதாக கூறி உமா மகேஸ்வரியின் கணவர் முருக சங்கரன் கூறியுள்ளார். ஆனால், அந்த தொகுதியும் கிடைக்கவில்லை.

 

இதனால், அதிருப்தியில் இருந்த சீனியம்மாள் தான் கொடுத்த 50 லட்சம் பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். அதற்கு எந்த பதிலும் கூறாமல் இழுத்தடித்து வந்துள்ளார் முருக சங்கரன். கோபத்தின் உச்சத்தில் இருந்த சீனியம்மாள் கூலிப்படை மூலம் இந்த கொலையை நடத்தி இருக்கலாம் என்று சந்தேகம் உருவாகியுள்ளது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்