பாஜகவுடைய ஏவலால் பல கட்சிகள் நம்மளை குறைகூறுகிறார்கள்! அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு!
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு பிரச்னையை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே செயல்பட்டு வருகிறது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

சென்னை : நேற்று தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் மத்திய அரசைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சா் பொன்.முத்துராமலிங்கம், மற்றும் இளம் பேச்சாளா் சஞ்சய், மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
அவர்களை தொடர்ந்து பேசிய அமைச்சர் கீதாஜீவன் எதிர்க்கட்சிகள் குறித்து சில விஷயங்களை பேசினார். இது தொடர்பாக பேசிய அவர் ” தமிழகத்தில் திமுக ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தமிழகம் முதலிடமாகவும் இருந்து வருகிறது. GT உற்பத்தியிலும் நமக்கு நல்ல இடம் இருக்கிறது. பெண்கள் அதிகமானோர் உற்பத்தியாளராக இருக்கும் மாநிலமும் தமிழ்நாடு தான்.
மொத்த இந்தியாவில் 42% பெண்கள் நம்மளுடைய தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு தமிழ்நாடு வளர்ச்சி பெற்று வருகிறது. தமிழ்நாடுடைய வாழ்வாதாரம் என்பது உயர்ந்து வருகிறது. நமது தமிழ் மொழியை காத்திடவேண்டும். எதிலும் நம்மளை குறை சொல்ல முடியாது.., ஆனால் எதிர்க்கட்சிகள் வாய்க்கு வந்தபடி எதோ பேசவேண்டும் என பேசுகிறார்கள்.
நம்மளை பற்றி எதாவது சொல்லவேண்டும் என்பதால் பொய்யான குற்றங்கள்…பொய்யான பிரச்சாரங்கள் என்ன குழப்பங்கள் உண்டாக்கலாம் என பேசுகிறார்கள். பிற்படுத்தப்பட்டவர்களாக இருந்தாலும், தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தாலும் எல்லாருக்கும் உரிமை கொடுக்கவேண்டுமென சொன்னவர் தந்தை பெரியார். இன்னைக்கு அவரை பற்றி சிலர் விமர்சனம் செய்து பேசுகிறார்கள்.
அவர் என்ன செய்தார் என்பதை சிந்தித்து பார்க்க தெரியாதவர்கள்..பாஜகவுடைய ஏவலால் பல்வேறு கட்சிகள், உதிரி கட்சிகள் மற்றும் புதிதாக வந்த காட்சிகள் எல்லாம் நம்மளை பற்றி புகார் கூறிவிட்டு எதோ குழப்பத்தை உண்டாக்கவேண்டும் என பேசி வருகிறார்கள். சட்ட ஒழுங்கு பிரச்சினையை உண்டாக்கவேண்டும்…தமிழக முதல்வரின் சாதனைகளை மறைத்துவிடவேண்டும் என்றே எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகிறது” எனவும் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
மேலும், சமீபகாலமாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் பெரியார் குறித்து விமர்சனம் செய்து பேசி வந்தார். அவருக்கு பதில் அளிக்கும் விதமாகவும் திமுகவை விமர்சனம் செய்யும் கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் கீதா ஜீவன் பேசியிருக்கிறார்.