பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் பல கோடி ஊழல் நடந்ததாக ஆளுநர் கூறியது அதிர்ச்சி அளிக்கிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கல்வித்துறையில் துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நிறைந்துள்ளதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்தார். நேற்று சென்னை திநகரில் உயர் கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று பேசினார்.அப்போது தமிழக ஆளுநர் பேசும் போது , தமிழகத்தில் உயர்கல்வித்துறை துணைவேந்தர் நியமனத்தில் கோடிக்கணக்கில் பணம் புரண்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் உள்ள ஊழலை கண்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன்.இதை மாற்ற வேண்டுமென நினைத்தேன் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் , தகுதிகள் அடிப்படையில் தான் துணை வேந்தரை நியமிக்க வேண்டும் என்றும் நான் தகுதிகள் அடிப்படையில் 9 துணை வேந்தர்களை நியமித்துள்ளேன் என்றும் தெரிவித்தார்.இது தமிழக அரசியல் கல்வித்துறையில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஊழல் தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் பல கோடி ஊழல் நடந்ததாக ஆளுநர் கூறியது அதிர்ச்சி அளிக்கிறது.கல்வியா, சீனியாரிட்டியா அல்லது யார் அதிக பணம் கொடுக்கிறார்கள் என்ற அடிப்படையில் நியமனமா? என்றும் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…