கஞ்சா விவகாரம்: மகனை தூக்கிய போலீசார்.. நேரில் சென்ற மன்சூர் அலிகான்.!
கஞ்சா வியாபாரிகளோடு தொடர்பில் இருந்தாக கைது செய்யப்பட்ட மகன் அலிகான் துக்ளக்-ஐ பார்க்க அம்பத்தூர் நீதிமன்றம் வந்தார் நடிகர் மன்சூர் அலிகான்.
சென்னை: நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்-ஐ போலீசார் பல மணி நேர விசாரணைக்குப் பின் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் கஞ்சா மற்றும் மெத் விற்பனை செய்ததாக சென்னையில் 10 பேர் கைதானார்கள். அவர்களுடன் அலிகான் துக்ளக்கிற்கு தொடர்பு இருப்பதாக கூறி விசாரணை நடத்திவந்த போலீசார், இன்று காலை அவரை கைது செய்தனர்.
சில தினங்களுக்கு முன், கைதான கஞ்சா வியாபாரிகளோடு தொடர்பில் இருந்ததாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். ஏற்கனவே, இந்த விவகாரம் தொடர்பாக கல்லூரி மாணவர்கள் உட்பட 10 பேரை ஜெ.ஜெ.நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் உள்ளிட்ட 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்ட நிலையில், அலிகான் துக்ளக் உள்ளிட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்னர். இந்நிலையில், மன்சூர் அலிகான் மகன் உட்பட 7 பேரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த போலீசார் அழைத்து வந்துள்ளனர்.
அப்பொழுது, தன் மகனை பார்ப்பதற்காக நடிகர் மன்சூர் அலிகான், நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்தார். அப்பொழுது, மன்சூர் அலிகனின் வழக்கறிஞர்களும் உடன் இருந்தனர். அவரது மகன் அலிகான் துக்ளக் போலீசாருடன் பேருந்தில் ஏறியதும், மன்சூர் அலிகன் “தெம்பா இரு… தைரியமா இரு, “ஏன் தப்பு பண்ற? கஞ்சா குடிச்சா அரெஸ்ட் பண்ணுவாங்கன்னு தெரியாதா? சாப்டியா டா” என்று மகனுக்கு அறிவுரை கூறினார்.