பிச்சைக்காரர் அருகில் அமர்ந்து, தெருநாயுடன் பேசி பிரச்சாரத்தில் ஈடுபட்ட மன்சூர் அலிகான்…!
தொண்டாமுத்தூரில் தேர்தல் பிரச்சாரத்துக்காக முகாமிட்டிருக்கும் அவர், இன்று பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் இருந்து தனது பிரச்சாரத்தை துவங்கினார்.
கடந்த முறை திண்டுக்கல்லில் நாம் தமிழர் கட்சி சார்பாக கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மன்சூரலிகான், அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் இம்முறை தேர்தலில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி, தமிழ்தேச புலிகள் என்ற கட்சியைத் தொடங்கி கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
இந்நிலையில் தொண்டாமுத்தூரில் தேர்தல் பிரச்சாரத்துக்காக முகாமிட்டிருக்கும் அவர், இன்று பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் இருந்து தனது பிரச்சாரத்தை துவங்கினார். பொதுமக்களிடம் குறைகளை கேட்டு எழுதிக் கொண்டார். அப்போது கோவில் அருகே இருந்த கடை வியாபாரிகளை சந்தித்து தொகுதியில் உள்ள குறைகள் பற்றி கேட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து, பேரூர் கோவில் எதிரே குப்பைகள் கொட்டப்பட்ட இடத்தில் பிச்சைக்காரரின் பக்கத்தில்அமர்ந்து யார் இதை சுத்தம் செய்ய உதவும் அதிகாரி என்றவாறு அங்கே படுத்திருந்த தெருநாயிடம், நீ குப்பையை போட்டாயா என நாயிடம் பேசிக்கொண்டிருந்தார். பின் அந்த வழியாக வந்த பொதுமக்களிடமும் அவர்களது முகவரி மற்றும் தொகுதி குறைகள் குறித்து கேட்டு எழுதி வைத்துக் கொண்டார். மக்கள் மத்தியில் மக்களை ஈர்க்கும் வண்ணம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் தலைவர்கள் மத்தியில், மன்சூர் அலிகான் செய்து வரும் இந்த வித்தியாசமான பிரச்சாரம் பலரையும் கவர்ந்து இழுத்துள்ளது.