பெண் காவலருக்கு காதல் கடிதம் கொடுத்த மனோகரன்..!
கோவை இரட்டை கொலை வழக்கில் மனோகரனுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு தற்போது கடலூரில் உள்ள மத்திய சிறையில் உள்ளார்.இதற்கு முன் கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போது மனோகரனை கடந்த சில மாதங்களுக்கு முன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த செல்லும் போது பாதுகாப்புக்காக வந்த பெண் போலீசாருக்கு காதல் கடிதம் கொடுத்தாததாக தெரிகிறது.
அதற்கு அந்த பெண் போலீசார் மனோகரனை கண்டித்து உள்ளார்.இதனால் மனோகரன் தனக்கு தானே கைவிலங்கு மூலம் தாக்கி கொண்டார்.இதில் மனோகரனுக்கு கையில் காயம் ஏற்பட்டது.இதுகுறித்து அந்த பெண் காவலர் உயர் அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் மனோகரனை கோவை சிறையில் இருந்து கடலூரில் உள்ள மத்திய சிறைக்கு மாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.