சட்டப்பேரவைக்கு மஞ்சப்பையுடன் வந்த மன்னார்குடி எம்.எல்.ஏ…!
சட்டப்பேரவைக்கு மஞ்சப்பையுடன் வந்த மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜார்ஜ் கோட்டைக்கு பதில் கலைவாணர் அரங்கில் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் முதன்முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ்தாய் வாழ்த்து நேரடியாக பாடப்பட்டது.
இதனை தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன.7-ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் என்று அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு வந்த மன்னார்குடி எம்.எல்.ஏ’ டி.ஆர்.பி.ராஜா, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்த, மீண்டும் மஞ்சப்பை என அச்சிடப்பட்ட, மஞ்சப்பையுடன் வருகை புரிந்துள்ளார்.