மீண்டும் மஞ்சப்பை இயக்கம் – முதலமைச்சர் வேண்டுகோள்!

manjaipai iyakkam

அளவற்ற தேவையற்ற நெகிழி பயன்பாட்டை எதிர்த்து நாம் தொடங்கிய இயக்கம்  மீண்டும் மஞ்சப்பை இயக்கம் என முதலமைச்சர் பதவு.

மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தில் மக்கள் அக்கறையுடன் பங்கேற்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் ட்விட்டர் பதிவில், இந்த ஆண்டுக்கான உலக சுற்றுசூழல் தினத்தின் மையக்கருவாக “Beat Plastic Pollution” அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அளவற்ற, தேவையற்ற நெகிழிப் பயன்பாட்டை எதிர்த்து நாம் தொடங்கிய மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தில் மக்கள் அக்கறையுடன் பங்கேற்க வேண்டும். மக்காத் தன்மையுடைய பிளாஸ்டிக் கழிவுகளை முறையாகப் பிரித்துப் போடவேண்டும் என என தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி தொடங்கப்பட்டுள்ள மீண்டும் மஞ்சப்பை திட்டம். இத்திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து மஞ்சப்பை போன்ற துணிப்பைகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான உலக சுற்றுசூழல் தினத்தின் மையமாக கொண்டு மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தில் மக்கள் அக்கறையுடன் பங்கேற்க வேண்டும் முதல்வர் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்