மீண்டும் மஞ்சப்பை எக்ஸ்பிரஸ்.. சென்னையில் குத்துசண்டை அகாடமி – அமைச்சர் அறிவிப்பு

Default Image

தமிழகத்தில் மாவட்ட அளவில் காலநிலை மாற்ற இயக்கம் ஏற்படுத்தப்படும் என பேரவையில் அமைச்சர் அறிவிப்பு.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வனம், சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய அமைச்சர் மெய்யநாதன், சென்னையில் ரூ.2 கோடி செலவில் குத்துசண்டை அகாடமி அமைக்கப்படும். பசுமை இயக்கத்தை நடைமுறைப்படுத்த 25,000 பசுமை பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படும். மீண்டும் மஞ்சப்பை எக்ஸ்பிரஸ் ரயில் கண்காட்சி என்ற திட்டம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய நிதியிலிருந்து ரூ.13 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.

மேலும், தமிழகத்தில் மாவட்ட அளவில் காலநிலை மாற்ற இயக்கம் ஏற்படுத்தப்படும். கோயம்பேடு சந்தை வளாகம் கரிம மாசு இல்லாத வளாகமாக உருவாக்கப்படும் என்றும் நெகிழி இல்லா வளாகங்களை உருவாக்கும் பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். இதன்பின் பேசிய அமைச்சர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, வேலூரில் விளையாட்டு மைதானங்களுக்கு கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டப்படும் என்றும் நடப்பாண்டு சுற்றுசூழல்துறை சார்பில் 1,000 மரங்கள் அடங்கிய குறுங்காடுகள் உருவாக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்