செருப்பு கடையில் மாஞ்சா நூல் பதுக்கி விற்பனை.. இருவர் கைது!
சென்னையில் செருப்பு கடையில் மாஞ்சா நூல் பதுக்கி விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடுவதால், பட்டம் அறுந்து அருகில் உள்ள உயர் அழுத்த மின் பாதையில் சிக்கி விடுகின்றது. இதனால், மின்தடை ஏற்பட்டத்தாலும், சாலையில் செல்லும் பயணிகள் மீது மாஞ்சா கயிறு இறுக்கி, மரணம் வரை கொண்டு செல்லும் ஆபத்து உள்ளது.
இதன்காரணமாக, சென்னையில் மாஞ்சா நூல் விற்பனை, மாஞ்சா நூலில் பட்டத்தை விடுவது, போன்றவற்றுக்கு செப்டம்பர் 14-ம் தேதி வரை தடை விதித்து அம்மாவட்ட மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அமைந்தக்கரை பகுதியில் உள்ள செருப்புக்கடை ஒன்றில் மாஞ்சா நூல் விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர், அந்த கடையில் நடத்திய சோதனையில் அங்கு மாஞ்சா நூல்கள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, அந்த செருப்பு கடை உரிமையாளர் தமீம் அன்சாரி மற்றும் ஷாஜகான் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, அந்த கடையில் இருந்த மேற்பட்ட காத்தாடிகள் மற்றும் மாஞ்சா நூலை போலீசார் பறிமுதல் செய்தனர்.