சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து தலா ரூ.1 லட்சம் நிவாரணம் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே சரக்கு வாகனத்தில் 33 பெண்கள் விவசாய பணிக்காக அழைத்து செல்லப்பட்டனர். அப்போது, வேன் எதிர்பாராத விதமாக டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பெண்கள் உயிரிழந்தனர்.
ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்து தலா ரூ.1 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்கள் தலா ரூ.50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…