மணீஷ் காஷ்யப் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது!
புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக போலி வீடியோ பதிவிட்ட மணீஷ் காஷ்யப் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய யூ டியூபர் மணீஷ் காஷ்யப் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பீகார் மாநில யூ டியூபர் மணீஷ் காஷ்யப் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளதாக மதுரை மாவட்ட எஸ்பி தகவல் தெரிவித்துள்ளார்.
வதந்தி பரப்பிய மணீஷ் காஷ்யப்பை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல் போலி வீடியோ பதிவிட்டிருந்தார் மணீஷ் காஷ்யப்.