மணிப்பூர் வீராங்கனைகள் பயிற்சியை தொடங்கிவிட்டனர் – அமைச்சர் உதயநிதி
மணிப்பூர் மாநிலத்தில் ஆசிய விளையாட்டு, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் போன்ற தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு பயிற்சி அளிக்க சாதகமற்ற சூழ்நிலை நிலவுவதால். அம்மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள்,வீராங்கனைகள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து பயிற்சி எடுக்குமாறு முதல்வர் அழைப்பு விடுத்திருந்தார்.
இதனையடுத்து, மணிப்பூரிலிருந்து விளையாட்டு வீரர்கள் தமிழகம் வந்துள்ளனர். அதன்படி, முதற்கட்டமாக மணிப்பூரிலிருந்து ஆசிய போட்டிகளுக்குத் தயாராக 15 விளையாட்டு வீரர்கள் தமிழகம் வந்தடைந்துள்ளார். இவர்களில் 10 வாள்வீச்சு வீரர்கள், 5 வீராங்கனைகள் மற்றும் 2 பயிற்சியாளர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் உதயநிதி, மணிப்பூர் வீராங்கனைகள் பயிற்சியை தொடங்கிவிட்டனர்; தினமும் காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம் என பயிற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என தெரிவித்துள்ளார்.
மேலும், விளையாட்டு வீரர்களுக்குக்கான 3% இடஒதுக்கீடு விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும், முதற்கட்டமாக 7 பேருக்கு வேலை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.