இந்தாண்டுக்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி துவங்கிய நிலையில், இன்றுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் மக்களவையில் எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி அவர்கள் காரசாரமாக பேசியிருந்தார். இதனை தொடர்ந்து நேற்று மாலை பிரதமர் மோடி, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பதிலளித்தார்.
அப்போது சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பேசினார். ஒன்றரை மணி நேரமாக பிரதமர் மணிப்பூர் குறித்து பேசாததால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இதனை தொடர்ந்து குரல் வாக்கெடுப்பின் மூலம் நம்பிக்கையில்லா தீர்மான தோல்வியடைந்ததாக சபாநாயகர் அறிவித்தார்.
இந்த நிலையில், இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்திற்கு 16 மணி நேரம். அதில் பாஜக வுக்கு 8 மணி நேரம். வரிந்துகட்டி பேசினார்கள். ஆனால் ஆளுங்கட்சியின் மணிப்பூர் எம் பி பேசவில்லை. 2 நிமிடமாவது பேசச்சொல்லுங்கள் என்று கேட்டோம். பேசவில்லை. அதற்கு பதிலாக மணிப்பூர் பற்றி பிரதமர் 2 நிமிடம் பேசினார்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…