மணிப்பூர் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ள திரு. இல.கணேசன் அவர்களுக்கு வாழ்த்துகள் என முதல்வர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சிக்கிம் மாநில ஆளுநர் கங்காதர் பிரசாத் அவர்கள் மணிப்பூர் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில், தற்போது மணிப்பூர் மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் அவர்களை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் அறிவித்துள்ளார். இவர் தமிழக பாஜக தலைவராகவும், மாநிலங்களவை முன்னாள் எம்பியாகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில், மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் அவர்களுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மணிப்பூர் மாநில ஆளுநராக பொறுப்பேற்க உள்ள கலைஞரின் அன்பைப் பெற்ற பண்பாளரும் நீண்ட அரசியல் அனுபவத்திற்கு சொந்தக்காரருமான அண்ணன் திரு இல.கணேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
சென்னை : 76-வது குடியரசு தினத்தை ஒட்டி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, தேமுதிக…
சென்னை : மருத்துவர் செரியன் (Dr. Cherian) காலமானார் என்ற செய்தி தமிழ்நாட்டில் மற்றும் மருத்துவ சமுதாயத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
குஜராத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் மூன்று ஒரு நாள் போட்டிகள்…
சென்னை : ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்கள் தனுஷ்கோடி அருகே 25.01.2025 அன்று…
உக்ரைன்-ரஷ்யா போர் என்பது 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் தொடங்கியது. இன்னும் இந்த போர்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் திலக் வர்மா செய்த…