கலைஞரின் அன்பை பெற்ற பண்பாளர் திரு. இல.கணேசன் அவர்களுக்கு வாழ்த்துகள் – முதல்வர்!
மணிப்பூர் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ள திரு. இல.கணேசன் அவர்களுக்கு வாழ்த்துகள் என முதல்வர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சிக்கிம் மாநில ஆளுநர் கங்காதர் பிரசாத் அவர்கள் மணிப்பூர் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில், தற்போது மணிப்பூர் மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் அவர்களை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் அறிவித்துள்ளார். இவர் தமிழக பாஜக தலைவராகவும், மாநிலங்களவை முன்னாள் எம்பியாகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில், மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் அவர்களுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மணிப்பூர் மாநில ஆளுநராக பொறுப்பேற்க உள்ள கலைஞரின் அன்பைப் பெற்ற பண்பாளரும் நீண்ட அரசியல் அனுபவத்திற்கு சொந்தக்காரருமான அண்ணன் திரு இல.கணேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
மணிப்பூர் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ள தலைவர் கலைஞரின் அன்பைப் பெற்ற பண்பாளரும்; நீண்ட அரசியல் அனுபவத்துக்குச் சொந்தக்காரருமான அண்ணன் திரு. இல.கணேசன் அவர்களுக்கு வாழ்த்துகள்! pic.twitter.com/gbFySiCcRp
— M.K.Stalin (@mkstalin) August 22, 2021