அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் மனு வழக்கை 24-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் துணை நடிகை சாந்தினி தெரிவித்தார்.
மேலும், மூன்று முறை தன்னை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்து சொன்னதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் எதிராக அடையாறு அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் அடைப்படையில் மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மணிகண்டன் தற்போது ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி செல்வகுமார் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விளக்கம் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க அவகாசம் வேண்டும் என தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து நீதிபதி காவல்துறை தரப்பில் ஜாமீன் மனு மீது விளக்கம் அளிக்க வரும் 24-ஆம் தேதிக்கு வழக்கை நீதிபதி ஒத்தி வைத்தார்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…