சேவை பெறும் உரிமை சட்டத்தை அடுத்த சட்டமன்ற கூட்டத் தொடரில் அவசியம் நிறைவேற்ற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
இலஞ்ச ஊழலைக் கட்டுப்படுத்தி, அரசு சேவைகள் விரைவாகக் கிடைத்திட வழிவகுக்கும் “சேவை பெறும் உரிமை சட்டத்தை” அடுத்த சட்டமன்ற கூட்டத் தொடரில் அவசியம் நிறைவேற்ற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள மநீம வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடர் விரைவில் நடத்தப்பட உள்ள சூழலில் “சேவை பெறும் உரிமைச் சட்டத்தை” உடனடியாக நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை மக்கள் நீதி மய்யம் மீண்டும் வலியுறுத்துகிறது.
இலஞ்ச,ஊழலைக் கட்டுப்படுத்துவதோடு, அரசின் சேவைகள் மக்களுக்கு விரைவாகக் கிடைத்திட வழிவகுக்கும் இச்சட்டத்தை நிறைவேற்றக்கோரி தமிழகமெங்கும் மாவட்ட ஆட்சியரிடம் மனு, ஆர்ப்பாட்டங்கள், தெருமுனைக் கூட்டங்களை மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து நடத்தி வருவதை நினைவு கூர்கிறோம்.
மேலும், இச்சட்டத்தை நிறைவேற்றுவோம் என்று ஆளுங்கட்சியான திமுகவானது தேர்தல் வாக்குறுதி(வாக்குறுதி எண்: 19) கொடுத்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டுள்ள இச்சட்டமானது அடுத்த சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழகத்திலும் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.’ என தெரிவித்துள்ளனர்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…