மாண்டஸ் புயல் எதிரொலி – எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தெரியுமா..?
மாண்டஸ் புயல் எதிரொலியாக 24 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
காலை வரை தீவிர புயலாக நகர்ந்து, பின்னர் சற்று வலுகுறைந்து மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் புதுச்சேரிக்கு இடையே புயல் கரையை கடக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், மாமல்லபுரத்திற்கு அருகே இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் எதிரொலியாக 24 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், கடலூர், வேலூர், திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், விழுப்புரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ,கள்ளக்குறிச்சி, சேலம்,நாமக்கல், தர்மபுரி, திருவண்ணாமலை, நாகை, திருப்பத்தூர்,இராமநாதபுரம், மற்றும் சிவகங்கை ஆகிய 24 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.