#MandousCyclone: 100 கிமீ வேகத்தில் காற்று! மரக்காணம் முதல் பழவேற்காடு வரை கனமழை!
சென்னையில் இருந்து 210 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாண்டஸ் புயல் 10 கிமீ வேகத்தில் நகர்வு.
வங்க கடலில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயல் தீவிர புயலில் இருந்து சாதாரண புயலாக வலுவிழந்தது. இந்த நிலையில், மாண்டஸ் புயல் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று தனியார் வானிலை ஆராச்சியாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இந்த மாண்டஸ் புயலால் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இன்று புயல் கரையை கடக்க உள்ளதால் மரக்காணம் முதல் பழவேற்காடு வரை மாலை நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளார். சென்னையில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது.
இதனிடையே, சென்னையில் இருந்து 210 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாண்டஸ் புயல் 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. மாமல்லபுரத்தில் இருந்து தென்கிழக்கு திசையில் 180 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.