மாண்டஸ் புயல் பாதிப்பு.! முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு.!
மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட தென் சென்னை பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
வங்கக்கடலில் உருவாகியிருந்த மாண்டஸ் புயல் இன்று அதிகாலை கரையை கரையை கடந்தது. மாமல்லபுரத்தில் கரையை கடக்கையில் புயல் காற்று வீசியதன் காரணமாக பல்வேறு மரங்கள் வீழ்ந்தன.
புயல் காரணமாக சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளில் காற்றின் வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல் 300க்கும் மேற்பட்ட மரங்கள் பல பகுதிகளில் முறிந்து விழுந்துள்ளன. மேலும், பல இடங்கள் புயலால் சேதமடைந்துள்ளது.
இந்த நிலையில், மாண்டஸ் புயல் பாதிப்பு நிலவரம் குறித்து கொட்டிவாக்கம், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், பனையூர் உள்ளிட்ட தென் சென்னை பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை முதல் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதில் புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் அதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.