இறுதி பருவத்தேர்வுகளை நடத்துவது கட்டாயம்- யுஜிசி
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வுகளை நடத்துவது கட்டாயம் என்று பல்கலைக்கழக மானிய குழு (University Grants Commission ) தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸின் பாதிப்பு காரணமாக கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளுக்கும் தடை விதித்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது தமிழக அரசு.மேலும் அரியர்ஸ் எழுதுவதற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனிடையே தமிழக அரசின் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் ராம் ஆதித்தன் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, யுஜிசி பதில் மனு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதிலில், கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு கட்டாயம் என்றும் முந்தைய தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சியடையச் செய்ய மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.யுஜிசி பதில் மனு தாக்கல் செய்த நிலையில் ,விரைவாக இந்த வழக்கு விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)