மணப்பாறை ஜல்லிக்கட்டு போட்டியில் ஒருவர் பலி.!
மணப்பாறை ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொங்கலை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 679காளைகளும் மற்றும் 275 வீரர்களும் பங்கேற்றனர். இதில் போட்டியை பார்த்துக்கொண்டிருந்த முருகன் என்பவரை மாடு முட்டியுள்ளது.
இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த்துள்ளார். மேலும் இந்த போட்டியில் மாடுகள் முட்டியதில் 25 மாடுபிடி வீரர்கள் காயமடைந்துள்ளனர், அவர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.