உலகம் கொரோனாவிலிருந்து விடுபட மணக்குள விநாயகர் அருள் புரிவார் – முதல்வர் நாராயணசாமி!

Published by
Rebekal

உலகம் கொரோனாவிலிருந்து விடுபட மணக்குள விநாயகர் அருள் புரிவார் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வாழ்த்து கூறியுள்ளார்.

விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரானா வைரஸ் ஊரடங்கு காரணமாக முதல்வரின் அறிவுறுத்தல் படி கட்டுப்பாடுகளுடன் சில இடங்களில் எளிமையான முறையில் விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்கள் இன்று சாமி தரிசனம் செய்துள்ளார். வழிபாடு செய்த பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கொரோனா நோய் பரவுதலை தடுக்க மத்திய அரசு விதித்த தடையின் காரணமாக சிலைகள் வைப்பதற்கு ஊர்வலம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை இந்து அமைப்பினரும் பொதுமக்களும் ஏற்று எளியமுறையில் விழாவை கொண்டாடி மகிழ்வது வரவேற்கத்தக்கது என்றும், கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக இது அமையும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் சக்தி வாய்ந்த மணக்குள விநாயகர் உலகம் முழுவதும் உள்ள கொரோனா வைரஸ் விலகுவதற்கு அருள் புரிவார் என்றும், விரைவில் மக்கள் சகஜமான வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Recent Posts

ஹாலிவுட் தரத்தில் அக்மார்க் தமிழ்ப்படம்…பட்டைய கிளப்பும் விடாமுயற்சி ட்ரைலர்!

ஹாலிவுட் தரத்தில் அக்மார்க் தமிழ்ப்படம்…பட்டைய கிளப்பும் விடாமுயற்சி ட்ரைலர்!

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…

26 minutes ago

“தூத்துக்குடி – மதுரை ரயில்வே பாதை… அதிமுக, பாஜக முழித்துக்கொண்டு இருக்கிறது” சு.வெங்கடேசன் பேட்டி!

மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…

31 minutes ago

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 20 காளைகளை அடக்கி காரை வென்ற அபி சித்தர்!

சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…

41 minutes ago

“சஞ்சு சாம்சன் வேண்டாம்” சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே!

மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…

2 hours ago

கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் செய்வது எப்படி.? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

சென்னை :கர்நாடகா ஸ்பெஷல் போண்டா  சூப் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; உளுந்து…

2 hours ago

மன்னராட்சி மன நிலைக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள் – அண்ணாமலை காட்டம்!

சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு…

2 hours ago