திமுகவின் நிர்வாக திறமையின்மை;விவசாயிகளுக்கு பேரிழப்பு – ஈபிஎஸ் குற்றச்சாட்டு!

Default Image

திமுக அரசின் நிர்வாக திறமையின்மை காரணமாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து அரசுக்கு இழப்பு மற்றும் நெல் சாகுபடி பரப்பை முறையாக கணக்கெடுக்காததால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக,கடந்த 10 நாட்களாக இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை செய்திருந்தும்,பல நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளவில்லை என்றும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை கால கன மழையின்காரணமாக, தமிழகம் முழுவதும் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகியுள்ளன எனவும் கூறியுள்ளார்.

எனவே,தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழையின் காரணமாக சேதமடைந்துள்ள பயிர்களை உடனடியாக கணக்கெடுத்து பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உடனுக்குடன் நிவாரணம் வழங்கிட வேண்டும் என்றும்,மேலும்,நெல் சாகுபடி செய்த அனைத்து விவசாயிகளிடம் இருந்து கால தாமதமின்றி நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் மக்கள் விரோத அரசை வலியுறுத்துவதாக ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்