சென்னையில் தாம்பரம் அடுத்து பம்மல் நந்தனாா் தெருவைச் சோ்ந்த தாமோதரன் என்பவர் ஜவுளி கடை வியாபாரத்தில் நஷ்டப்பட்டதால், கடந்த 2017-ஆம் ஆண்டில் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். இதையடுத்து, தனது மனைவி தீபா, தாய் சரஸ்வதி மட்டுமின்றி ரோஷன், மீனாட்சி எனும் இரு குழந்தைகள் ஆகியோரை கொலை செய்து விட்டு, பின்னர் மாமனாருக்கு தகவல் அளித்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் தீபாவின் தந்தை பாலகிருஷ்ணன் புகாா் அளித்தாா்.
இதையடுத்து போலீஸாா் தாமோதரன் மீது வழக்குப் பதிவு செய்தனா். அதன்பேரில், குடும்பத்தினரைக் கொன்று விட்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு அரசு மருத்துவமனையில் உயிா் பிழைத்த அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பின்னர் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், விசாரணையில் தாமோதரன் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவருக்கு மரண தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…