கடலூர் மாவட்டம், கெடிலம் ஆற்றங்கரை ஓரமாக மனிதக்கால் வெட்டப்பட்ட நிலையில், கண்டெடுப்பு.
கடலூர் மாவட்டம், கெடிலம் ஆற்றங்கரை ஓரமாக மனிதக்கால் வெட்டப்பட்ட நிலையில், கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிற நிலையில், யாராவது கொலை செய்து, கால்பாகத்தை தூக்கி எறிந்துள்ளனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து அந்த காலில், துணிகள் கட்டப்பட்டிருந்ததை கண்டு, போலீசார்அருகில் உள்ள தனியார் மருத்துவாமனையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இருவருக்கு அண்மையில், கால் அகற்றப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், ‘மருத்துவ நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக, நோயாளியின் இடது கால் அகற்றப்பட்ட பாகத்தை, முறையாக அப்புறப்படுத்தாமல், வெளியே வீசியுள்ளனரா?’ என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…