காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாங்கி விற்க்கும் தொழிலை செய்து வருகிறார். இவர், தனது பெற்றோர்களை காண செய்யாறு அருகே உள்ள வேல்சோமசுந்தரம் பகுதிக்கு சென்றார்.
அப்பொழுது அங்கு உள்ள டீக்கடை ஒன்றில் டீ குடிக்க சென்றுள்ளார். அந்த சமயம் காரில் வந்த 10 பேர் கொண்ட கும்பல், அரிவாளால் சதீஷ்குமாரை தாக்கினார்கள். ரத்த காயங்களுடன், அங்கு வந்த தனியார் பேருந்து ஒன்றின் ஏறினார் சதீஷ்குமார். அப்பொழுதும் அவரை விடாமல் துரத்தி சென்று அந்த கும்பல் பேருந்தில் வைத்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.
இதனை கண்ட அப்பேருந்தில் பயணித்த மக்கள் அலறியடித்து அங்கிருந்து ஓடினார்கள். மேலும், அங்குள்ள பொதுமக்கள் சதீஷ்குமாரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த கொலைக்குறித்து 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…