போராட்டத்தால் இந்தியா குலுங்க வேண்டும்..! ஆலோசிக்க வாருங்கள் ஸ்டாலின் -மம்தா பரபரப்பு கடிதம்
- நாட்டின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. பாஜகவின் ஆட்சிக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது
- ஜனநாயகத்தை காக்க போராட்டங்களை முன்னெடுப்பது பற்றி ஆலோசிக்க ஸ்டாலின் வர வேண்டும் என்று மம்தா கடிதம்
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போரட்டங்கள் நடைபெற்று வருகிறது.இந்த சட்டத்திற்கு நாடு முழுவதும் கட்சிகள் அனைத்தும் கடுமையான கண்டனங்களையும் சட்டத்திற்கு எதிராக போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.அவ்வாறு இந்த சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பை வடகிழக்கு மாநிலங்கள் காட்டி வந்த நிலையில் மேற்கு வங்கமும் இதற்கு விதி விலக்கல்ல அங்கும் போராட்டம் நடந்தது.ஒரு கட்டத்தில் கலவரமாக மாறி போராட்டக் காரர்கள் இரயில்கலுக்கு தீ வைத்து கொழுத்துவிட்டனர்.இதனால் இரயில் சேவை பாதிக்கப்பட்டது.மேலும் இணையசேவையும் முடக்கப்பட்டது.
சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தாவும் குரல் கொடுத்தும்,போராட்டம் மற்றும் பேரணிகளையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் அவர் திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில் குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை சட்டம் மூலம் நாட்டின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது இந்த கடுமையான ஆட்சிக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது இந்தியாவின் ஜனநாயக ஆன்மாவை காப்பாற்ற அமைதியான,ஆழமான போராட்டங்கள் அவசியம்.
நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்’ ஜனநாயகத்தை காக்க போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து ஆலோசிக்க வர வேண்டும் என்று தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.இந்த சட்டத்திற்கு எதிராக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் பா.சிதம்பரம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கு கொண்ட மாபெரும் பேரணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.