அரசியல் ஆதாயத்துக்காகத்தான் சமூகநீதி பற்றி பாமக பேசுகிறது ..! திருமாவளவன்

Default Image

அரசியல் ஆதாயத்துக்காகத்தான் சமூகநீதி பற்றி பாமக பேசுகிறது  என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில்,உயர்ஜாதி வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தபோது, பாமக எம்.பி.  அன்புமணி அதை எதிர்க்காதது ஏன்? என்றும்  உண்மையிலேயே சமூகநீதி மீது அக்கறை இருந்திருந்தால் இடஒதுக்கீட்டுக் கொள்கையைக் குழிதோண்டி புதைக்கும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டாமா? எனவும், அரசியல் ஆதாயத்துக்காகத்தான் சமூகநீதி பற்றி பாமக பேசுகிறது . பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 11-ம் தேதி சேப்பாக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெறும் . இதனால் தமிழக அரசியலிலோ, திமுக கூட்டணியிலோ எந்த சிக்கலும் வராது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்