முரசொலி விவகாரம் : ராமதாஸ் உள்ளிட்ட இருவரும் கௌரவம் பார்க்காமல் மன்னிப்பு கேட்க வேண்டும் – திமுக
- முரசொலி விவகாரம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் , பாஜகவின் சீனிவாசன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
- ராமதாஸ் மற்றும் சீனிவாசன் ஆகிய இருவரும் கௌரவம் பார்க்காமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
முரசொலி இடம் பஞ்சமி நிலம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் , பாஜகவின் சீனிவாசனும் கூறியதை எதிர்த்து எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் ஆவணங்களை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்தார்.இந்த வழக்கு விசாரணை ஜனவரி 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் பேசுகையில், முரசொலி அலுவலக இடம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என அவதூறாக பேசியதற்கு எதிராக முரசொலியின் அறங்காவலர் என்ற முறையில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாஜகவின் சீனிவாசனுக்கும் நோட்டீஸ் அனுப்பினோம்.ஆனால் இருவருமே பதிலளிக்காததால் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தோம்.முரசொலி இடம் குறித்து அவதூறு பரப்பிய ராமதாஸ் மற்றும் சீனிவாசன் ஆகிய இருவரும் கௌரவம் பார்க்காமல் மன்னிப்பு கேட்க வேண்டும்.அவர்கள் இருவரும் கவுரவம் பார்க்காமல், ஆணவம் பார்க்காமல், திமிரு பிடிக்காமல் தங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரினால் திமுக தலைவர் ஸ்டாலின்அனுமதியோடு இந்த வழக்கை வாபஸ் பெறுவேன் என்று தெரிவித்தார்.