நேற்றிரவு சீன அதிபருக்கு மோடி அளிக்கப்பட்ட விருந்து பட்டியல்…!
தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நேற்று(அக்.11) சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பிறகு சீன அதிபருக்கு சிறப்பக்கலை பற்றி மோடி விளக்கினார். சீன அதிபர் ஜின்பிங் மற்றும் மோடி இருவரும் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விருந்தில் பங்கேற்று சிறப்பித்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு சீன அதிபருக்கு பிரதமர் மோடி அளிக்கப்பட்ட விருந்து பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த விருந்தில் தக்காளி ரஸம், கடலை குருமா, சாம்பார் என சௌவுத் இந்தியன் உணவை ருசித்துள்ளார் ஜின்பிங்.