குரூப் 4 தேர்வில் முறைகேடு.. வாய்ப்பே இல்லை – டிஎன்பிஎஸ்சி விளக்கம்!

Default Image

குரூப் 4 தேர்வில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கம்.

தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. குரூப் 4 தேர்வுகளின் முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இந்த சமயத்தில், குரூப் 4 தேர்வில் ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்த தட்டச்சு பணியிடங்களுக்கு 450 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி உள்ளவர்களின் பட்டியலை நேற்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிடபட்டது.

அந்த பட்டியலில் தான் இந்த சர்ச்சை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எனவே, குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றிருக்க வாய்ப்பு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு பதிலளிக்கும் வகையில், குரூப் 4 தேர்வில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்துளத்து. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி கூறுகையில், ஒரு குறிப்பிட்ட தேர்வுக்கான பயிற்சி வழங்குவதில் குறிப்பிட்ட பகுதி என்பது முன்னணியில் இருக்கும்.

அதுபோன்று, ஸ்டேனோ டைப்பிங் பயிற்சி பொறுத்தவரை காஞ்சிபுரம், சங்கரன்கோவில் என்பது கடந்த காலங்களிலும் அதிகமான தேர்வர்கள் தேர்வாகியுள்ளனர் என விளக்கமளித்துள்ளது. சங்கரன் கோவிலில் அமைக்கப்பட்ட மையங்களில் இருந்து 450 பேர் தேர்வு எழுதினர். ஒரே தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் அதிக அளவு தேர்ச்சி பெற்றுள்ளதால் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்