பிப்.13 முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்கிறார் மல்லிகார்ஜுன கார்கே!

mallikarjuna kharge

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்காக தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் உள்ள அதன் கூட்டணி கட்சிகளும் தேர்தல் பணியில் மும்மரம் காட்டி வருகிறது. அதன்படி, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை சமீபத்தில் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

திமுக சார்பில் டி.ஆர்.பாலு தலைமையிலான குழு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்தி இருந்தது. அப்போது,  மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 14 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ சோதனை!

இதனைத்தொடர்ந்து, திமுக – காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு தொடர்பாக இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த பல்வேறு மாநிலங்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பயணம் மேற்கொள்ளவதாக கூறப்பட்டது.

அந்தவகையில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனை நடத்த பிப்ரவரி 13ம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தமிழ்நாடு வருகிறார் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பிப்.13ம் தேதி தமிழகம் வரும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அன்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசவுள்ளார். இந்த சந்திப்பின்போது, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்