மக்களுடன் முதல்வர்… சோதனை முறையில் திட்டத்தை தொடங்கியது தமிழக அரசு!
சென்னை மாநகராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் சோதனை அடிப்படையில் இன்று தொடங்கியுள்ளது தமிழ்நாடு அரசு. அதன்படி, Service delivery @ Door step என்பதை அடிப்படையாக கொண்ட மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தின் சோதனை சென்னை மாநகராட்சியில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் நடத்தப்படும் முகாமில் 10 துறைகளின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொள்வார்கள். முகாமில் பெறப்படும் மனுக்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு 15 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறுவதை ஒட்டி ஆணையர்கள் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நான் முதல்வன், களத்தில் முதல்வர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஆளும் அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்தவகையில், Service Delivery@Door Steps மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தது. இந்த நிலையில், குறைகளுக்கு தீர்வுக்கான சோதனை அடிப்படையில் இந்த திட்டம் இன்று செயல்படுத்தப்பட்டுள்ளது.
சேலம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து… நோயாளிகள் அவசரமாக வெளியேற்றம்!
மக்களுடன் முதல்வர் முகாமில் பொதுமக்கள் மற்றும் தொழில்முனைவோர் கலந்து கொண்டு புதிய மின்இணைப்பு, மின் வீதப்பட்டியல் மாற்றம், பெயர்மாற்றம், மின்பளு மாற்றம், குடிநீர்-கழிவுநீர் இணைப்புகள், சொத்துவரி பெயர்மாற்றம், பிறப்பு-இறப்பு சான்றிதழ், திடக்கழிவு மேலாண்மை, பட்டா மாறுதல், உட்பிரிவு நிலஅளவை, இலவச வீட்டு மனைப்பட்டா, வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்பட அரசு சார்ந்த சேவைகளுக்கு விண்ணப்பம் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்த மனுக்களை இணையத்தளத்தில் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மக்களுடன் முதல்வர் முகாமுக்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்து வருகிறார். மேலும் இதுகுறித்து பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.