மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி….!

மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் நீதி மைய கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் அவர்கள் கடந்த 100 நாட்களாக பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமல், ஒரு சில தினங்களில் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
தற்பொழுது மீண்டும் கமல்ஹாசன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைக்காக தான் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று மாலையே வீடு திரும்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.