“மகனை மீட்க உலகின் அத்தனைக் கதவுகளையும் தட்டி விட்டார் அற்புதம் அம்மாள்”- கமல்ஹாசன்…!

Published by
Edison
  • ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளது.
  • மகனை மீட்க உலகின் அத்தனைக் கதவுகளையும் தட்டி விட்டார் அற்புதம் அம்மாள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளை கடந்து 31-வது ஆண்டு தொடங்கியுள்ளது.பேரறிவாளன் தனது வாழ்நாளின் பாதி பகுதியை சிறையிலேயே கழித்து விட்டார்.அவருடன் 6 தமிழர்களும் 30 ஆண்டுகளாக சிறையில் வாழ்க்கையை கழித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால்,தற்போது,பேரறிவாளனின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால், மருத்துவ சிகிச்சைக்காக 30 நாட்கள் அவர் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

எனினும்,பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மட்டுமல்லாமல், அரசியல் பிரபலங்கள் மற்றும் பல தரப்பினரும், இன்று வரை பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலைக்காக கோரிக்கைகளை முன்வைத்து தான் வருகின்றனர்.

இந்நிலையில்,பேரறிவாளன் விடுதலை குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது:”மகனை மீட்க உலகின் அத்தனைக் கதவுகளையும் தட்டி விட்டார் அற்புதம் அம்மாள். தன் உயிராற்றலின் ஒவ்வொரு துளியையும் அநீதியின் கொடுங்கரங்களில் சிக்கித் தவிக்கும் பேரறிவாளனின் விடுதலைக்கே செலவழித்த இந்த அற்புதத்தாயின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்?”,என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Published by
Edison

Recent Posts

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…

1 min ago

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…

5 mins ago

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

25 mins ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

48 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

1 hour ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

2 hours ago