புதுச்சேரியிலும் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணி போட்டி.!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இணைந்து போட்டியிடுகின்றனர்.
புதுச்சேரியில் சட்டப்பேரவையில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிரணி என இரு கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொடர்ந்து தொகுதி பங்கீடு இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில், 3வது அணியாக மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி மற்றும் சுசி கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது என மநீம மாநில பொறுப்பாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்போவதாகவும் கூறியுள்ளார். இதனிடையே தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இணைந்து களமிறங்கியுள்ளது. 70 பேர் கொண்ட முதற்க்ட்ட வேட்பாளர் பட்டியலை கமல்ஹாசன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025