உள்ளாட்சி தேர்தலுக்கு மக்கள்நீதி மய்யம் தயாராகி வருகிறது: கமல்
தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகி வருகிறது என கமல்ஹாசன் கூறினார்.
மக்கள் நீதி மய்யம் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டிலும் போட்டியிட்டு வெற்றி பெறவில்லை. தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தோல்வியடைந்த நிலையில் சில முக்கிய நிர்வாகிகள் வேறு கட்சிக்கு மாறினர்.
இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், தமிழகத்தில் அடுத்து நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகி வருகிறது என கூறினார்.